தாயகத்திலே இன்றும் பல்வேறு மட்டத்தில் எம் தமிழ்க் குழந்தைகள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டாக பல்வேறு திட்டங்களை கனடா வன்னிச் சங்கம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் அடுத்த ஓர் குடும்ப உதவித்திட்டமாக கறவையினப் பசு வழங்கிய செயற்பாடு முல்லைத்தீவு மாங்குளம் கிராமத்தில் இடம்பெற்றது. போரிலே கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு திரு ராஜா சேந்தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பிரகாரம் இந்த உதவித்திட்டம் அவர் அனு;பிவைத்த நிதி உதவியுடன் வன்னிச் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.
நெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிக்கிராமத்தில் வசிக்கின்றபோரிலே கால் ஒன்றினை இழந்துள்ள 5 குழந்தைகளுக்கு தாயாகவும், தனித்து வாழ்கின்ற இளந்தாயான திருமதி விக்கினேஸ்வரி அவர்களுக்கான தோட்டக் கிணறு அமைத்துக் கொடுக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.
கனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த கோவில்திருவிழாவானது கடந்த சனிக்கிழமை ஜுலை மாதம் 2ம் திகதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வருடா வருடம் கனடா றிச்மன்கில் இந்து ஆலயத்தில் நடைபெறும் முருகனுக்கான ஏழாம் திருவிழாவினை கனடா வாழ் வன்னி மக்கள் சார்பாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் நடாத்தி வருகின்றது.