தேசிய தொழில் நுட்ப நிறுவனம் வன்னிப்பிரதேச மாணவர்களின் தொழில்நுட்ப கல்வியை இலவசமாக வழங்கும் முகமாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு லாபநோக்கற்ற நிறுவனமாகும்.
தேசிய தொழிநுட்ப நிறுவனத்தின் முதலாவது நிலையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்றில் 2011ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. ஆதன் பின் படி நிலை வளர்ச்சி கண்டு கற்சிலை மடு, நெடுங்கேணி மற்றும் மல்லாவிப்பிரதேசங்களின் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு பல நூறு மாணவர்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு பிரதேசங்களின் இயங்கும் நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை கனடாவில் வசிக்குமு; அப்பிரதேச மக்கள் பெறுப்பேற்று நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் நிர்வாக அனுசரனையுடன் இந்நிறுவனங்கள் தமது அரிய பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றது.
தேசிய தொழிநுட்ப நிறுவனத்தின் வளர்ச்சிப் பணியில் உங்களின் பங்கு என்பது அத்தியவசியமானதாகும். வுன்னிப்பிரதேசம் எங்கும் அதன் எல்லைப்பரப்புக்களை தாண்டியும் எமது இந்த நிறுவனத்தை நிறுவ பேராவல் கொண்டுள்ளோம் ஆனாலும் நிதி நிலையையும் நிர்வாக செலவீனங்கள் இட்டு நிரப்பும் வசதி படைத்த அமைப்பாக நாம் இல்லை. எனவே நீங்கள் முன் வந்து இந் நிறுவனத்தை வளாக்க உதவுமாறு வேண்டுகின்றோம்.