| |

தாயகத்திலே இன்றும் பல்வேறு மட்டத்தில் எம் தமிழ்க் குழந்தைகள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டாக பல்வேறு திட்டங்களை கனடா வன்னிச் சங்கம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.

 

அந்த வகையில் தற்போது அமையம் புதிய திட்டமாக இல்லங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்கான உணவு வசதிகளை புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியோடு அவ்வப்போது செய்துகொடுப்பதற்கு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்மாக கடந்த 10/7/2016 அன்று திரு ராஜா அவர்களின் நிதியுதவியோடு பாரதி இல்லத்தில் இருக்கின்ற 115 குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

 

நீங்களும் இவ்வாறான உணவு உதவி வழங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-644-1113