| |

கனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த கோவில்திருவிழாவானது கடந்த சனிக்கிழமை ஜுலை மாதம் 2ம் திகதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வருடா வருடம் கனடா றிச்மன்கில் இந்து ஆலயத்தில் நடைபெறும் முருகனுக்கான ஏழாம் திருவிழாவினை கனடா வாழ் வன்னி மக்கள் சார்பாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் நடாத்தி வருகின்றது.

 

இவ்வருடத்திற்கான திருவிழாவானது கடந்த நீண்டவார விடுமுறையின் போது நடைபெற்றது. பல நூற்றுக்கணக்காக பக்தர்கள் புடைசூழ முருகன் வீதி வலம் வந்தார். விடுமுறை நாட்கள் என்றாலும் பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்து சிறப்பித்தமை சிறப்பு.

வழமைபோல்அமையத்தின் நீண்டகால உறுப்பினர்களாக செல்வகுமரன் மற்றும் ஞானம் குடும்பத்தினரின் தண்ணீர் பந்தல் கடுமையான வெட்பத்தை தணிக்க பக்தர்களுக்கு உதவியது என்றால் மிகையில்லை. இவர்களுக்கு அமையத்தின் நன்றிகள்.